அவசரமாக வெளியாகவிருக்கும் KIA SP CONCEPT கார்

(kia sp concept expected launch features images)
தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் தயாரித்து வரும் புதிய கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த காருக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் SP கான்செப்ட் S.U.V காரை முடிவுசெய்யப்பட்ட தேதிக்கு முன்னரே விற்பனைக்கு கொண்டு வர கியா திட்டமிட்டு வருகிறது.இந்த தகவலை Economic Times செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.
Image result for kia-sp-concept-expected-launch-features-imagesஆட்டோ எக்ஸ்போவில் S.P கான்செப்ட் காருக்கு கிடைத்த வரவேற்பை உணர்ந்து கியா இந்த முடிவை எடுத்துள்ளதாக E.D செய்தி தெரிவிக்கிறது. கியா நிறுவனத்திற்கே உரிய தாத்பரியங்களோடு, இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில் S.P கான்செப்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்கால S.U.V கார் தேவைகளை கருதி, அதற்கேற்றவாறான கட்டமைப்பு நிலைப்பாடு, ஸ்போர்டி திறன் மற்றும் நீண்ட ஹூடு பகுதிகளை இந்த கார் பெற்றிருப்பது அசத்தலாக உள்ளது.
S.P கான்செப்ட் கார் தயாரிக்க 4 மாதங்கள் என முடிவு எடுக்கப்பட்டது. அது தற்போது 2 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் மொத்தம் 16 விதமான புதிய ரக கார்களை கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது.
Image result for kia-sp-concept-expected-launch-features-imagesஅப்போது கியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். இதனால் உற்சாகமடைந்த கியா, இந்தியாவில் எந்தமாதியான கார் பயன்பாட்டு தேவைகள் உள்ளன, கார்களின் கட்டமைப்பில் இந்தியா எதை புதியதாக விரும்புகிறது என்ற கோணத்தில் ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது. S.P கான்செப்ட் காம்பேக்ட் எஸ்யூவி காரை தொடர்ந்து, சப்-4 மீட்டர் S.U.V காரை 2020ம் ஆண்டுவாக்கில் கியா வெளியிடுகிறது. தொடர்ந்து ப்ரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலும் அதே ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
2020ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் கியா மூன்று கார்களை வெளியிட்டு இருக்கும். இதனால் அந்நிறுவனம் இந்தியாவின் டாப் விற்பனை பட்டியலிலும் இடம்பெறுவது எளிது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறான தாத்பரியங்களோடு தான் கியாவின் S.P கான்செப்ட் எஸ்யூவி கார் தயாராகியுள்ளது. தொடர்ந்து சர்வதேசளவில் சில நாடுகளில் இது வெளியிடப்படுகிறது.
Image result for kia-sp-concept-expected-launch-features-imagesகாம்பேக்ட் S.U.V செக்மென்டில் இந்தியாவில் இந்த கார் மாருதி எஸ் கிராஸ், ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுடன் போட்டி போடும். இதனுடைய விலை என்ற அடிப்படையில் பார்க்கும் போது S.P கான்செப்ட் இந்தியாவில் பிரபல ப்ரீமியம் ரக கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் கால்பதித்து, இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ள கியா S.P கான்செப்ட் கார், 2019ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

No comments:

Powered by Blogger.