சீகலர்“ செயலியை சீக்கிரமே உள்வாங்கவுள்ள சாம்சங் QLED டிவி
தென்கொரியாவின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றான QLED தொலைக்காட்சிக்காக பிரத்யேகமாக சீகலர்(SeeColors) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் சாம்சங் டிவி வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தை பெறுவார்கள் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் விஷூயுவல் டிஸ்ப்ளே பிசினஸ் பிரிவின் துணைத்தலைவர் ஹெயோங்னம் கிம் அவர்கள் கூறியபோது, ‘சாம்சங் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் செளகரியத்திற்காக புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது QLED டிவிக்காக அறிமுகம் செய்துள்ள சீகலர்ஸ் செயலி, டெக்னாலஜி உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, புதிய விஷுவல் டிஸ்ப்ளே அனுபவத்தையும் கொடுக்கவல்லது.மேலும் கேலக்ஸி ஸ்மார்ட்போன் எஸ்6, எஸ்6 எட்ஜ், எஸ்6 எட்ஜ்+ மற்றும் எஸ்7, எஸ்7 எட்ஜ், எஸ்8 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
No comments: